Pages

Tuesday, 13 October 2015

குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 30

வானம் ஆடை ஆகாத காதல் 

வாய்மைத் தேற்றம்
பின்னர் புணர்ச்சி

  • அறப்புணையில் செல்லலாம் என்று சொல்லித் தேற்றியபின் அதனை உறுதிப்படுத்துவானாய் மலைத்தெய்வம் முருகன் பெயரைச்சொல்லி முருகனையும் என்னையும் வாழ்த்தினான்.
  • அவனையும் என்னையும் தொழுதான்.
  • சொன்னசொல் தவறமாட்டேன் என்று வஞ்சினம் கூறினான்.
  • அதனை என் நெஞ்சம் விரும்பியது.
  • துன்பம் இன்பமாக மாறியது.
யானை தந்த புணர்ச்சி இது.

வானம் தலைவிக்கு ஆடையாயிற்று.
மயங்கியவர்கள் விரும்பும் பூஞ்சோலையில் அன்றைய பகல் பொழுதை அவனோடு கழித்தோம்.
ஞாயிறு மேலைமலையில் மறைந்தது. - தோழி சொல்கிறாள். 

He and she dressed the sky in their love. 

குறிஞ்சிப் பாட்டு – சொல்-பிரிப்புப்-பதிவு

மீமிசைக் கடவுள் வாழ்த்தி, கைதொழுது,     
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி,       210
அம் தீம் தெள் நீர் குடித்தலின், நெஞ்சு அமர்ந்து,      
அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி,     
வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும்           
பூ மலி சோலை, அப் பகல் கழிப்பி,        
எல்லை செல்ல, ஏழ் ஊர்பு, இறைஞ்சி,               215
பல் கதிர் மண்டிலம், கல் சேர்பு மறைய          

ஆரிய அரசன் பிரகத்தனைத்
தமிழ் அறிவித்தற்குக்
கபிலர்பாடியது
அகப்பொருள்
தோழி அறத்தொடு நிற்றல்


No comments:

Post a Comment