![]() |
இல்லறத்தில் விருந்தோம்பல் இன்பம் திருமணம் செய்துகொண்டு இந்த இன்பத்தைக் காணலாம் - என்று அவன் அவளைத் தேற்றினான் |
ஊரறியத் திருமணம் செய்துகொள்வேன், இல்லறத்தில்
விருந்தோம்பல் என்னும் தெப்பத்தில் ஏறி இன்பமாகச் செல்லலாம் - என்றான்.
எங்களுடைய உள்ளக் கிடக்கையை அவன் படித்தான்.
எங்களைத் தேற்றினான்.
என்ன சொல்லித் தேற்றினான்?
- திருமண விழாவை ஊர்த்திருவிழாவாக நடத்துவேன்.
- மிடாமிடாவாய்ச் சமைத்த சோற்றை வந்தவர்க்கெல்லாம் வழங்குவேன்.
- திருமண வளநகர் (வளமனை) ஊரார் எல்லாருக்கும் திறந்திருக்கும்.
- அதற்குள் எல்லாரும் தடையின்றி நுழையலாம்.
- வந்தவர்களுக்கெல்லாம் புலவுச்சோறு. (பிரியா1ணி)
- அதில் நெய்யும் ஒழுகும்.
- குடும்பத்தைச் சேர்ந்த உற்றார் உறவினர்களும் விருந்தினரோடு விருந்து உண்பர்.
- அவர்கள் உண்டபின் மீதம் இருப்பதைப் பிணைந்து கவளமாக உன்னோடு சேர்ந்து நான் உண்பது எனக்குப் பெருமை தரும் செயல்.
- இல்வாழ்க்கை நீரோட்டத்தில் விருந்தோம்பல் என்னும் அறநெறிப் புணையில் ஏறிக்கொண்டு நாம் இன்பமாகச் செல்வோம் – என்று தேற்றினான்.
I like to host the entire village in our marriage ceremony.
குறிஞ்சிப் பாட்டு – சொல்-பிரிப்புப்-பதிவு
உள்ளத்
தன்மை
உள்ளினன்
கொண்டு, 200
"சாறு அயர்ந்தன்ன,
மிடாஅச்
சொன்றி
வருநர்க்கு
வரையா,
வள
நகர்
பொற்ப,
மலரத்
திறந்த
வாயில்
பலர்
உண,
பைந்
நிணம்
ஒழுகிய
நெய்ம்
மலி
அடிசில்
வசை
இல்
வான்
திணைப்
புரையோர்
கடும்பொடு 205
விருந்து
உண்டு
எஞ்சிய
மிச்சில்,
பெருந்தகை,
நின்னோடு
உண்டலும்
புரைவது"
என்று,
ஆங்கு,
அறம்
புணை
ஆகத்
தேற்றி,
பிறங்கு
மலை
ஆரிய அரசன் பிரகத்தனைத்
தமிழ் அறிவித்தற்குக்
கபிலர்பாடியது
அகப்பொருள்
தோழி அறத்தொடு நிற்றல்
No comments:
Post a Comment