![]() |
இப்படி எளிமையாக ஒலிபெயர்ப்புக் குறி செய்யலாமே |
தமிழில் உள்ள குறில்-நெடில், ட-த, ல-ழ-ள, ங-ஞ-ண-ந-ன, ர-ற, ஃ, ஆகிய எழுத்துக்களை வேறுபடுத்தி உலகில் பலர் அறிந்த ஆங்கிலத்தில் எழுதிக்காட்டச் சில எளிய குறியீடுகள் தேவைப்படுகின்றன.
இந்தக்
குறியெழுத்துக்களை நாம் சூட்டும் ‘குறிப்பெயர்’களுக்கு மட்டுமே பயன்படுத்துதல் வேண்டும்.
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் முதலான இயற்பெயர்களுக்குப் பயன்படுத்துதல்
கூடாது. இவற்றை மொழிபெயர்புச் செய்தே எழுதுதல் வேண்டும்.
![]() |
அகர வரிசை |
அதுபோலத்
தமிழொலியை ஆங்கில எழுத்துக்களால் எழுதிக்காட்டவும் எளிய முறை ஒன்று தேவைப்படுகிறது.
இங்குத்
தரப்பட்டுள்ள முறைமை எளிதாய், பிற மொழியாளர் எளிதில் ஒலிக்க்க்கூடியதாய் அமைந்திருத்தலைப்
பயன்படுத்தி உணர்ந்து கொள்ளலாம்.
இவற்றை எழுதிக் காட்ட உடன்தூக்கு shift இல்லாமல்
ஆங்கிலம் எழுதும்போது தட்டக்கூடிய [;], [‘], [,] ஆகிய மூன்று குறியீடுகள் மட்டும் இணைக்குறிகளாகச்
சேர்க்கப்பட்டுள்ளன.
மேலே காட்டப்பட்டுள்ள எழுத்துக்களில் மொழிமுதல்
எழுத்துக்களாக வருபவை ஞ, ந, த என்னும் மூன்று எழுத்துக்கள் மட்டுமே. இவற்றிற்கு மட்டுமே
துணைக்குறியீடு தேவை. மொழியின் இடையிலும் கடையிலும் வரும்போது அடுத்து வரும் மெய்யால்
முதலில் நிற்கும் மெய்யொலியைக் குறித்துவிட முடியும். இவற்றைச் சில எடுத்துக்காட்டுகளால்
இங்கு எழுதிப் பார்க்கலாம்.
குறில், நெடில் என்பன உயிரொலிகளில் மட்டுமே
காணப்படும் வேறுபாடு. இதனை [;] குறியீடு சேர்த்து எழுதிக் காட்டலாம்.
எடுத்துக்காட்டு - உயிரொலி
ஒருமாத்திரை ஒலி கொண்ட குறில் – அ இ உ எ
ஒ – இவற்றை a I u e o என்னும் எழுத்துக்களால் குறித்துவருகிறோம். இதனையே பின்பற்றலாம்.
இவற்றின் நெடிலை a; I; u; e; o; என எழுதலாம்.
ஐ ஔ என்னும் என்னும் ஒன்றரை மாத்திரை அரைநெடில் எழுத்துக்குத் தனிக் குறி தேவையில்லை.
Ai au எனத் துணையெழுத்துக்களால் எழுதிக்காட்டலாம்.
- ஆதன் A;dan or A;than
- ஈசானன் I;sa;nan
- ஊரப்பன் U;rappan
- ஏரப்பன் E;rappan
- ஓதன் O;dan or O;than
எடுத்துக்காட்டு – மெய்யொலி – முதலொலி
- ஞ – ஓத ஞானி – O;da nja;ni ஞானம் (ஒருவன் பெயர்) – Nja;nam, ஞானம் (அறிவு) = conscience
- ந – நடராசன் - N,darasan or Nadarasan or Natarasan
- த – தமிழ் - Tamil
ஏனையவை மொழிமுதலில் வருவதில்லை.
எடுத்துக்காட்டு – மெய்யொலி – இடையொலி
- கங்கன் - Kangan
- கக்கன் - Kakkan
- பிஞ்ஞகன் - Pinnjagan
- நஞ்சன் - Nanjan
- பிண்டன் - Pindan
- பிட்டன் - Pittan
- கந்தன் - Kanthan
- தத்தன் - Tatthan
- செல்லம் - Sellam
- தமிழ் - Tamil’
- காளி - Ka;l,i
- குறவன் - Kur’avan
மாத்திரை
- போன்ம் என்பதில் உள்ள ம் கால் மாத்திரை
- அஃறிணை என்பதில் உள்ள ஃ கால் மாத்திரை
- ஃ அரை மாத்திரை
- நுந்தை என்பதில் உள்ள நு அரை மாத்திரை
என்பன
போன்ற பண்டைய ஒலிப்பு முறை இன்று இல்லை.
No comments:
Post a Comment