Pages

Saturday, 13 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 370


370. முல்லை (மருதம் எனல் பொருந்தும்)

பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழு முகை
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு
இருப்பின், இரு மருங்கினமே; கிடப்பின்,
வில்லக விரலின் பொருந்தி; அவன்
நல் அகம் சேரின், ஒரு மருங்கினமே.

கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் என்பது கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

வில்லக விரலினார் பாடல்

அவன் ஆம்பல் பூவின் வாயை வண்டு திறக்கும் ஊரன். அவன் இருப்பதும் கிடப்பதும் இரு மருங்காகும். எய்யும்போது ஒரு கை வில்லைப் பிடிக்கும். மற்றொரு கை அம்பைப் பிடிக்கும். அது போல அவன் என்னிடமும் இருப்பான். அவனது மனைவியிடமும் இருப்பான்.   

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment