361.
குறிஞ்சி
அம்ம
வாழி,
தோழி! அன்னைக்கு
உயர்நிலை
உலகமும் சிறிதால் அவர் மலை
மாலைப்
பெய்த மணம் கமழ் உந்தியொடு
காலை
வந்த முழுமுதற் காந்தள்
மெல்
இலை குழைய முயங்கலும்,
இல்
உய்த்து நடுதலும், கடியாதோளே.
மணம் கமழ் உந்தியொடு
காலை வந்த முழுமுதற் காந்தள்
|
வரைவு மலிந்தவழித் தோழி, ''நன்கு ஆற்றினாய்!'' என்றாட்குக் கிழத்தி சொல்லியது.
கபிலர்
அம்ம
தோழி கேள். அன்னைக்கு அறநெறியால் வரும் மேலுலகமும் என் நலனை நோக்கும்போது சிறியது.
அவர் (என்னவர்) மலையில் மணம் பரப்பிக்கொண்டு வயிற்றைக் காட்டிக்கொண்டு பூக்கும் காந்தள்
பூவை இல்லத்துக்குக் கொண்டுவந்து நடுவதையும், அவர் அணிந்த அப் பூமாலை குழையும்படி அவரைத்
தழுவுவதையும் அவள் விலக்கவில்லையே.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு
No comments:
Post a Comment