Pages

Wednesday, 10 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 360

360. குறிஞ்சி

வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து
அறியான் ஆகுதல் அன்னை காணிய,
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும்,
வாரற்க தில்ல தோழி! சாரல்
பிடிக் கை அன்ன பெருங் குரல் ஏனல்
உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
சிலம்பின் சிலம்பும் சோலை
இலங்கு மலை நாடன் இரவினானே.

பிடிக்கை அன்ன பெருங்குரல் ஏனல்

தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது

மதுரை ஈழத்துப் பூதன் தேவன் பாடல்

அவன் இரவில் வரவேண்டாம். கால் சிலம்பு போல் ஒலி எழுப்பும் குளிர் கருவியைக் கையில் வைத்துக்கொண்டு யானையின் கை போல் கதிர் வாங்கியிருக்கும் தினைப்புனத்தில் கிளி ஓட்டும் நாடன் அவனுக்கு அந்த இடம் தெரியுமல்லவா.

என் மாறுபாட்டுக்குக் காரணம் எனக்கு ‘வெறி’ என்று உணர்ந்த பூசாரி வேலன் அன்னை முன்னிலையிலேயே என்னைத் துன்புறுத்தினாலும் பரவாயில்லை. அவன் வரவேண்டாம்.
  
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment