Pages

Wednesday, 10 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 359

359. மருதம்

கண்டிசின் பாண! பண்பு உடைத்து அம்ம:
மாலை விரிந்த பசு வெண் நிலவின்
குறுங் காற் கட்டில் நறும் பூஞ் சேக்கை,
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ,
புதல்வற் தழீஇயினன் விறலவன்;
புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே.

அவன் காதல்
அவள் காதல்

பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிப் பெறாது, தானே புக்குக் கூடியது கண்டு தோழி, பாணற்குச் சொல்லியது. 

பேயன் பாடல் 

பாண, இதைப் பார். இதுதான் பண்பு. மாலையில் முழு நிலா. குட்டையான கால்களை உடைய கட்டிலில் பூ போன்ற மெத்தை. தூங்கும் யானை போல் பெருமூச்சு விட்டுக்கொண்டு தன் மனைவியின் முதுகுப்புறம் தழுவிக்கொண்டு கிடக்கிறான். அவளோ அந்த வெற்றி-வீரனின் மகனைத் தழுவிக்கொண்டு கிடக்கிறாள்.    

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment