346. குறிஞ்சி
நாகு பிடி நயந்த முளைக்கோட்டு இளங் களிறு,
குன்றம் நண்ணி,
குறவர் ஆர்ப்ப,
மன்றம் போழும் நாடன் தோழி!
சுனைப் பூங் குவளைத் தொடலை தந்தும்,
தினைப் புன மருங்கில் படுகிளி ஓப்பியும்,
காலை வந்து,
மாலைப் பொழுதில்
நல் அகம் நயந்து, தான் உயங்கிச்
சொல்லவும் ஆகாது அஃகியோனே.
வாயில் இளங்கண்ணன்
ஆண் யானைக்குட்டி
பெண் யானைக்குட்டியை விரும்பி ஊர் மன்றத்துக்குள் நுழையும் நாடன் அவன். உன்னோடு சேர்ந்து
குவளைப் பூ பறித்தான். தொடலை என்னும் ஆடையாகத் தைத்துத் தந்தான். தினைப்புனத்தில் உன்னோடு
சேர்ந்து கிளி ஓட்டினான். காலையில் வந்து இவ்வாறெல்லாம் செய்த அவன் இப்போது மாலையில்
வீட்டுக்கு வந்து தவித்துக்கொண்டு தங்கியுள்ளான்.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு
No comments:
Post a Comment