337.
குறிஞ்சி
முலையே
முகிழ்முகிழ்த்தனவே, தலையே
கிளைஇய
குரலே கிழக்கு வீழ்ந்தனவே;
செறி
முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின;
சுணங்கும்
சில தோன்றினவே; அணங்கு என
யான்
தன் அறிவல்; தான் அறியலளே;
யாங்கு
ஆகுவள்கொல் தானே
பெரு
முது செல்வர் ஒரு மட மகளே?
பொதுக்கயத்துக் கீரந்தை பாடல்
இவள்
மிகப் பெரிய செல்வம் படைத்தவளின் மகள். இவள் முலை மெல்ல மெல்ல வெளிவருகின்றன. தலையில்
தழைத்த கூந்தல் தாழ்ந்து தொங்குகிறது. வெண்ணிறப் பல் இருக்க வேண்டிய முறைப்படி நிரலாகக்
கண்ணைப் பறிக்கின்றன. மேனியை அழகாக்கும் சுணங்குகளும் தோன்றுகின்றன. இவற்றால் இவள்
பிறரை வருத்தும் அணங்குத் தெய்வமாக விளங்குகிறாள். இது இவளுக்குத் தெரியாது. எனக்குத்
தெரிகிறது.
இப்படித்
தோழியிடம் காதலியின் முன்னிலையில் சொல்லித் தன் காதலியைத் தனக்குத் தரும்படி வேண்டுகிறான்.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு
No comments:
Post a Comment