Pages

Saturday, 23 August 2014

Love poem Kurunthogai குறுந்தொகை # 287


Friend! It seems that as soon as he met us he is going to leave us immediately. This is the time when a woman (I) eggers to eat tamarind that alike as a crescent on third day. As the pregnant woman rainy cloud is moving on the mountain wherein he is to pass through.
            
This is a poem compiled by NAN-NA:GAIYAR of Kachippe:du village
2nd century B.C.


287. முல்லை

அம்ம வாழி தோழி காதலர்
இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு,
விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி,
செழும் பல் குன்றம் நோக்கி,
பெருங் கலி வானம் ஏர்தரும் பொழுதே?


பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, ''நம்மைத் துறந்து வாரார்'' என்று கவன்றாட்கு, பருவம் காட்டி, தோழி, ''வருவர்'' எனச் சொல்லியது,

கச்சிப்பேட்டு நன்னாகையார் பாடல்


அம்ம! தோழி! காதலர் நம்மைக் கண்டதும் இப்பொழுதே நம்மைத் துறந்து செல்கிறார் போல இருக்கிறதே. மூன்று நாள் பிறைநிலா போலப் பழுத்திருக்கும் புளியங்காய்க்குச் கருவுற்ற பெண் விரும்புவது போல புணரி என்னும் மழைமேகம் தண்ணீரைச் சுமந்துகொண்டு வானத்தில் ஏற முடியாமல் மேயும் இடித்துக்கொண்டு மேயும் மலையை நோக்கிச் செல்வாரே. 

No comments:

Post a Comment