Pages

Friday, 22 August 2014

Love poem Kurunthogai குறுந்தொகை # 286


I recall her beauty. Nectarous flows in her teeth of red lips. Her curling hair resembling overlapping sand bed in a river smells sandal fragrance. She looks like a creeper. Her eyes are raining fighting benevolence. In total with her elegant look she laughs at me love.      

This is a poem compiled by EYITRIYANA:R
2nd century B.C.

286. குறிஞ்சி

உள்ளிக் காண்பென் போல்வல் முள் எயிற்று
அமிழ்தம் ஊறும் செவ் வாய், கமழ் அகில்
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்,
பேர் அமர் மழைக்கண், கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே.

இரந்துபின் நின்ற கிழவன் குறைமறாமல் கூறியது; பாங்கற்குச் சொல்லியதூஉம் ஆம்.

எயிற்றியனார் பாடல்

அவளை நினைத்துப் பார்க்கிறேன். அவள் கொடிச்சி (கோடன்(மலையன்) என்பதன் பெண்பால். கொடி போன்றவள் எனலும் ஆம். சிவந்த வாயில் உள்ள பல்லில் அமிழ்தம் ஊறும். ஆற்று மணல்-அறல் போன்ற கூந்தலில் சந்தன மணம் கமழும். மழை போன்ற கண் போர் தொடுக்கும். அவள் அழகிலே சிரிப்போடு கூடிய ஒரு மதமதப்பு. – அவன் நினைவு. 

No comments:

Post a Comment