This is a poem compiled by Bu:that the:van
2nd century B.C.
285.
பாலை
வைகா
வைகல் வைகவும் வாரார்;
எல்லா
எல்லை எல்லவும் தோன்றார்;
யாண்டு
உளர்கொல்லோ? தோழி! ஈண்டு இவர்
சொல்லிய
பருவமோ இதுவே; பல்
ஊழ்
புன்
புறப் பெடையொடு பயிரி, இன்
புறவு
இமைக்கண்
ஏது ஆகின்றோ! ஞெமைத்
தலை
ஊன்
நசைஇப் பருந்து இருந்து உகக்கும் (பருந்து ஆந்தையை உண்ணல்)
வான்
உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
பருவம்
கண்டு வேறுபட்ட இடத்து, வற்புறுத்தும்
தோழிக்கு, வன்புறை
எதிரழிந்து,தலைமகள்
சொல்லியது.
பூதத்தேவன் பாடல்
பெண்புறா
தன் ஆண்புறாவைப் பலமுறை அழைக்கிறது. அங்குள்ள ஞெமை மரத்தில் இருந்துகொண்டு பருந்து
(அதைத் தின்றுகொண்டு) மகிழ்கிறது. இப்படிப்பட்ட வானளாவிய கல் மலை வழியாக அவர் சென்றுள்ளார்.
எங்கே இருக்கிறாரோ தெரியவில்லை. தோழி! தூங்காத நாள் தூங்கும் வேளை இது. இருட்டாத காலம்
இருட்டும் வேளை இது. மீள்வேன் என்று அவர் சொன்ன பருவம் இதுதான்.

No comments:
Post a Comment