Pages

Friday, 22 August 2014

Love poem Kurunthogai குறுந்தொகை # 284


This is the village where waterfall seems to be as its slop of its thatched hut. It is natural that the people in the village whether they are wise or not blame me, not him. He is a Man of the mountain wherein the sizable rock with blooming KANTHAL flower seems to be wounded elephant in fight.
  
This is a poem compiled by Mil’ai-ve:l’ Titthan  
2nd century B.C.

284. குறிஞ்சி

பொருத யானைப் புகர் முகம் கடுப்ப,
மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன்
ஒண் செங் காந்தள் அவிழும் நாடன்
அறவன் ஆயினும், அல்லன் ஆயினும்,
நம் ஏசுவரோ? தம் இலர் கொல்லோ?-
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி
கொன் நிலைக் குரம்பையின் இழிதரும்
இன்னாது இருந்த இச் சிறுகுடியோரே.

வரைவிடைத் தோழி, கிழத்திக்கு உரைப்பாளாய், உரைத்தது.

மிளைவேள் தித்தன் பாடல்

பெரிய பாறாங்கல்லில் செங்காந்தள் மலர் பூத்துக் கிடந்து போரிட்டுக் காயம் பட்ட யானை போல் தோன்றும் நாடன் வன். இந்த ஊரிலுள்ள வீட்டுக் கூரைகள் சரிந்து இருப்பது போல் மலையிலிருந்து இறங்கும் அருவியை உடைய இந்தச் சிறுகுடியில் வாழும் மக்கள் அறிவுடையவர் ஆயினும் அறிவில்லாதவர் ஆயினும் நம்மை ஏசுவார்களோ? அவனை ஏசமாட்டார்களோ? 

No comments:

Post a Comment