It is humiliate living without wealth than
begging.
He teaches us these lessons.
On the basis of the lesson he went to earn.
That is good.
But it is bad that he went through the forest
where thieves with spears roaming around the place wherein kits are expecting
to eat the meat of the killed people’s body after fetching their wealth.
The lady says to her friend-maid.
This is a poem compiled by Perungadungo:, a poet
also a king who sung famous poems on love of arid land.
2nd century B.C.
2nd century B.C.
283. பாலை
''உள்ளது சிதைப்போர்'' உளர் எனப்படாஅர்;
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு'' எனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி என்றும்
கூற்றத்தன்ன கொலை வேல் மறவர்
ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த
படு முடைப் பருந்து பார்த்திருக்கும்
நெடு மூதிடைய நீர் இல் ஆறே.
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி. ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்கு, ''அவர் பிரிய ஆற்றேனாயினேனல்லேன்; அவர் போன கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன்''. என்று, கிழத்தி சொல்லியது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல்
முன்னோர் தேடி வைத்துள்ளதை அழித்துக்கொண்டு வாழ்பவர்
உலகில் இருப்பவராகவே கருதத் தக்கவர் அல்லர். பொருள் இல்லாதவர் வாழ்க்கை பிச்சை எடுப்பதிலும்
இளிவானது.
இப்படிச் சொல்லி நம்மை அவர் தெளியவைத்தார்.
தெளிவுபடுத்தியவாறே பொருள் தேடச் சென்றுவிட்டார்.
தோழி! எமன் போன்று வேலுடன் திரியும் மறவர் வழிப்போக்கரின்
பொருளைக் கவர்ந்துகொண்டு கொன்று வீசிய உடலின் முடைநாற்றத்துக்காகப் பருந்து பார்த்துக்கொண்டிருக்கும்
தண்ணீரே இல்லாத வழியில் அல்லவா அவர் சென்றுள்ளார்.
No comments:
Post a Comment