Pages

Wednesday, 20 August 2014

Love poem Kurunthogai குறுந்தொகை # 282

See other parts of VARAGU
வரகு, வரகுப்பயிர்

In a rainy reason, one day aged baby of a NAVVI deer tries to eat a leaf of VARAGU plant in the field by its instinct without eating. If he happens to see he will return back immediately.
Your bangles falling down as petals of flower VEN-KU:TAL,M does not do ever. When he comes they will stop falling.
Don’t be moan. The friend-maid consoles her lady with these words.
படம் - வரகு
Image - VARAGU plant 

This is a poem compiled by N:gam Po:tthan
2nd century B.C.

282. பாலை

செவ்வி கொள் வரகின் செஞ் சுவற் கலித்த
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை 
நவ்வி நாள்மறி கவ்விக் கடன் கழிக்கும்
கார் எதிர் தண் புனம் காணின், கைவளை,
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த
வெண் கூதாளத்து அம் தூம்பு புது மலர்
ஆர் கழல்பு உகுவ போல,
சோர்குவ அல்ல என்பர்கொல் நமரே?

வினைவயிற் பிரிந்த இடத்துத் தோழி கிழத்திக்கு உரைத்தது.

நாகம் போத்தன் பாடல்

நீரோட்டமுள்ள மலைக்காட்டில் வெண்கூதாளம்பூ உதிர்வது போல வளையல் கழன்று உகச் செய்தவர் அவர். உதிர்ந்த மலர் மீண்டும் மரத்தில் சேராதது போலச் சேரமாட்டோம் என்று அவர் மனம் எண்ணுமோ?
கார்காலத்தில், அன்று பிறந்த நவ்விமானின் குட்டி கொல்லையில் தளிர்த்திருக்கும் வரகு இலையில் ஒன்றை மேயக் கௌவுவதைப் பார்த்து பார்த்து அவர் மனம் நம்மை எண்ணாதோ?


No comments:

Post a Comment