This is a poem compiled by Ki:ratthan of
Hudavayil village
2nd century B.C.
281. பாலை
வெண் மணற் பொதுளிய பைங் கால் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டு,
அத்த வேம்பின் அமலை வான் பூச் (படம்)
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
குன்று தலைமணந்த கானம்
சென்றனர் கொல்லோ சேயிழை! நமரே?
பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு, தோழி வற்புறுப்பாட்குக் கிழத்தி உரைத்தது.
குடவாயிற் கீரத்தன் பாடல்
பனை மரத்தின் கருக்கு மட்டையில் வேப்பம்பூ கொட்டிக்
கிடக்கும் காட்டுவழியில் அவர் சென்றாரோ? – அவள் எண்ணிப்பார்க்கிறாள்.
பாடும் புலவர் சோழ நாட்டுக் குடவாயில் ஊரினர்.
வேம்பு பாண்டியன் குடிப்பூ.
பனை சேரன் குடிப்பூ.
No comments:
Post a Comment