He says to his friend.
This is a poem compiled by Nakki:ran
2nd century B.C.
280. குறிஞ்சி
கேளிர்! வாழியோ, கேளிர்! நாளும் என்
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப்
பெருந் தோட் குறுமகள் சிறு மெல் ஆகம்
ஒரு நாள் புணரப் புணரின், [படம்]
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே.
கழற்றெதிர்மறை
நக்கீரர் பாடல்
நல்லது நண்பர்களே. என் நெஞ்சைக் கட்டிவைத்துள்ள அவளோடு
ஒரு நாளேனும் இருந்துவிட்டால் போதும். அதற்குமேல் அரைநாள் வாழ்க்கையும் எனக்கு வேண்டாம்.
அவள் அழகிய சிலவாகிய கூந்தலை உடையவள். பருத்த தோளினைக்
கொண்டவள். மென்மையான மார்பகம் கொண்டவள்.
(அவள் இல்லாவிட்டால் என்ன எனத் தோழர்கள் கூறியதற்கு
அவன் கூறும் விடை இது)
No comments:
Post a Comment