The lonely lady and her friend-maid deal in conversation.
This is a poem compiled by Maruthan Ilana:ganar
of Madurai village
2nd century B.C.
279. முல்லை
திரிமருப்பு எருமை இருள் நிற மை ஆன்
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி,
புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும்
இது பொழுது ஆகவும் வாரார் கொல்லோ
மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல்
துகள் சூழ் யானையின் [படம்] பொலியத் தோன்றும்
இரும் பல் குன்றம் போகி,
திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே?
வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
மதுரை மருதன் இளநாகனார்
மழையால் கழுவப்படாமல் இருக்கும் பெரிய பாறாங்கல் தூசு
படிந்திருக்கும் யானை போல் தோன்றும் மலை வழியாகச் சென்ற அவர் நள்ளிரவாகியும் வரவில்லையே.
முறுக்கிய கொம்பை உடைய எருமைக் கழுத்தில் இருக்கும் மணி அல்லவா யாமத்தில் ஒலிக்கிறது.
(அவர் வரும் தேர்மணி ஓசை இல்லையே) என் உயர்ந்த தோளை அவர் நினைக்கவில்லையே.
No comments:
Post a Comment