The friend-maid consoles her lady with these
words.
This is a poem compiled by Pe:ri-S:attan
2nd century B.C.
278. பாலை
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து
முறி [படம்] கண்டன்ன மெல்லென் சீறடிச்
சிறு பசும் பாவையும், எம்மும், உள்ளார்
கொடியர் வாழி தோழி! கடுவன்
ஊழுறு தீம் கனி உதிர்ப்ப, கீழ் இருந்து,
ஏர்ப்பன ஏர்ப்பன உண்ணும்
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே.
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள்
உரைத்தது.
பேரிசாத்தன்
ஆண்குரங்கு கடுவன் மரத்தில் ஏறிக் கனிகளை உதிர்க்கும்.
பெண்குரங்கு மந்தி தன் குட்டியுடன் தரையில் இருந்துகொண்டு நல்ல நல்ல பழமாகப் பார்த்து
எடுத்து உண்ணும். இப்படிபட்ட மலைப்பாதை வழியாக அவர் சென்றுள்ளார்.
காற்று மோதும் மாந்தளிர் போன்ற காலடி கொண்டவள் அவரது
காதலி. அவளையும் அவர் நினைக்கவில்லை. அவளுடன் சேர்ந்து விளையாடிய பாவை விளையாட்டையும்
நினைக்கவில்லை. இருவரையும் சேர்த்து வைத்த என்னையும் (தோழியையும்) நினைக்கவில்லை. அவர்
கொடியர்.
[இவ்வாறு கூறினால் தலைவி ஆறுதல் பெறுவாள் என்பது தோழியின்
நம்பிக்கை].
No comments:
Post a Comment