A friend-maid of a lady inquires a saint (image) about
her Master’s arrival.
This is a poem compiled by O:ril Pichaiyar (the
name of the poet is not known. He was named after his phrase used in this poem)
2nd century B.C.
277. பாலை
ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை,
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி,
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே
''மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை,
எக் கால் வருவது?'' என்றி;
அக் கால் வருவர், எம் காதலோரே.
தலைமகன் பிரிந்தவழி, அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு
வினாவியது.
ஓரிற் பிச்சையார் பாடல்
ஓரிற் பிச்சையார் பாடல்
(அறிவரே!) (படம்) துணை இல்லாத தெருவில் துணை இல்லாத இல்லத்தில்
(என் தலைவி) இருக்கும் ஒரே வீட்டில் வயிறார நெய் கலந்த செம்மையான நெல்லஞ்சோற்றை உண்ணத்
தருவேன். அத்துடன் வெதுவெதுப்பான நீரைச் செப்புப் பாத்திரத்தில் தருவேன். மின்னி மின்னி
மழை பொழிந்து முடிந்து வாடை வீசும் காலம் இது. அவர் எப்போது வருவார் என்று சொல்லுங்கள்.
(தங்கள் வாக்கு பலிக்கும்) அப்போதே அவர் வந்துசேர்வார்.
No comments:
Post a Comment