Pages

Thursday 14 August 2014

Love poem Kurunthogai குறுந்தொகை # 274


Cruel men of the forest will be waiting on the tree Uga: that sheds its fruit like dove. They will aim to shoot arrow (image) on passers-by to take their properties. As there is no water to drink the passers-by will chew the fiber of the tree to quench their thirsty. Such a sadistic forest is also sweet when I have embraced her shoulder earlier.           

This is a poem compiled by Urutthiran
2nd century B.C.

274. பாலை

புறவுப் புறத்தன்ன புன் கால் உகாஅத்து
இறவுச் சினை அன்ன நளி கனி உதிர,
விடு கணை வில்லொடு பற்றி, (படம்) கோடு இவர்பு,
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும்
இன்னாக் கானமும், இனிய பொன்னொடு
மணி மிடை அல்குல் மடந்தை
அணி முலை ஆகம் முயங்கினம் செலினே.

பொருள் வலித்த நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது.

உருத்திரன் பாடல்

அந்தக் கானத்தில் புறாவைப் போல் தோன்றும் பழம் உதிர அது காய்த்திருக்கும் உகா மரத்தில் ஏறி இருந்துகொண்டு வழிப்பறி செய்யும் கொடிய ஆடவர் அம்பு எய்யும் வில்லோடு வழியில் வருபவர்களுக்காகக் காத்திருப்பர். அதன் வழியாகச் செல்வோர் குடிக்க நீர் இல்லாமல் உகா மரத்தின் நாரை மென்று தாகத்தைத் தணித்துக்கொள்வர். இப்படிப்பட்ட கானத்தின் வழியே செல்வதுகூட இனியதுதான். எப்போது? பொன்னும் மணியும் அணிந்திருக்கும் அல்குலை உடைய அவளது முலையைத் தழுவப்பெற்றால், அப்போது.




No comments:

Post a Comment