Pages

Friday 15 August 2014

Love poem Kurunthogai குறுந்தொகை # 275


I hear bell ringing sound. I couldn't decide whether it is ringing bells in the neck of cows (image) returning home or ringing bell in his chariot returning back after victory along with his warriors. May we go to the top of the rock on which flower MULLAI climbs?  
             
This is a poem compiled by Ma:sa:tthiyar of Okkur village
2nd century B.C.

275. முல்லை

முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக்
கண்டனம் வருகம்; சென்மோ தோழி!
எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ? (படம்)
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல் வில் இளையர் பக்கம் போற்ற,
ஈர் மணற் காட்டாறு வரூஉம்
தேர் மணிகொல்? ஆண்டு இயம்பிய உளவே.

பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்ற, தோழி தலைமகட்கு உரைத்தது.

ஒக்கூர் மாசாத்தி பாடல்

மணி ஒலி கேட்டேன். அது மாலையில் காளைகளுடன் இருப்பிடம் திரும்பும் ஆனிரையின் ஒலியா அல்லது செய்வினை முடிந்த செம்மாப்புடன் வில்வீரர் புடை சூழ ஈர மணல் காட்டாற்றில் வரும் அவரது தேர் மணி ஓசையா என்று தெரியவில்லை. எனவே முல்லைக்கொடி படர்ந்திருக்கும் அந்த உயர்ந்த மலைக் கல்லின்மீது ஏறிக் கண்டுவரலாம். போகலாமா தோழி? 

No comments:

Post a Comment