Pages

Thursday 14 August 2014

Love poem Kurunthogai குறுந்தொகை # 273


Dear with forehead that smells like breeze comes along with the fragrant of flowers in the forest! You understand the global nature. Seeing a honeycomb in a very high cave one tries to climb using a bamboo step ladder. (image) But he returns back want of height of the ladder without fetching. In such a way your lover, if he leaves you alone to earn in distant country, will return back. You are the honey available here for him. -  Thus the friend-maid consoles her lady.  
     
This is a poem compiled by A:nthaiyar of Siraikkudy village
2nd century B.C.

273. பாலை

அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப்
பெருங் காடு உளரும் அசைவளி போல,
தண்ணிய கமழும் ஒண்ணுதலோயே!
நொந்தனஆயின், கண்டது மொழிவல்;
பெருந் தேன் கண்படு வரையில் முது மால்பு (படம்)
அறியாது ஏறிய மடவோன் போல,
ஏமாந்தன்று, இவ் உலகம்;
நாம் உளேம் ஆகப் பிரியலன் தெளிமே.

''பிரிவர்'' எனக் கவன்ற தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

சிறைக்குடி ஆந்தையார் பாடல்

பூ மொட்டுகளை அசைத்துக்கொண்டு காற்றில் வரும் தென்றல் போல் மணக்கும் நெற்றியை உடையவளே! நான் கண்டதைச் சொல்கிறேன் கேள். மலைப்பாறைக் குகையில் தேன் இருப்பது கண்டு அதனை எடுக்கும் ஆசையில் முதிய மூங்கில் கொம்பு ஏணியில் ஏறியவன் அது எட்டவில்லை என ஏமாந்து மீள்வது போல காதலன் திரும்பிவிடுவான். நீ இருக்கையில் காதலன் உன்னை விட்டுப் பிரிய மாட்டான். புரிந்துகொள். 

No comments:

Post a Comment