This
is a poem compiled by ORU-SIRAIP-PERIYAN
2nd century B.C.
272.
குறிஞ்சி
தீண்டலும்
இயைவது கொல்லோ மாண்ட
வில்லுடை
வீளையர் கல் இடுபு எடுத்த
நனந்
தலைக் கானத்து இனம் தலைப்பிரிந்த
புன்கண்
மட மான் நேர்பட, தன்னையர்
சிலை
மாண் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக்
குருதியொடு
பறித்த செங் கோல் வாளி
மாறு
கொண்டன்ன உண்கண்,
நாறு
இருங் கூந்தல், கொடிச்சி தோளே! (படம்)
கழறிய
பாங்கற்குக் கிழவன் உரைத்தது.
ஒரு சிறைப் பெரியன் பாடல்
காதலியின்
கண் வீச்சைப் பற்றித் தலைவன் தன் தோழனிடம் கூறுகிறான். வில்லோடு திரியும் காட்டு மக்கள்
இனத்திலிருந்து பிரிந்த மானைக் கண்டதும் எய்து பிடுங்கிய அம்பு போன்றது அவள் கண். அவள்
கூந்தலையோ, தோளையோ மீண்டும் அடைய முடியுமா?
No comments:
Post a Comment