Pages

Thursday, 14 August 2014

Love poem Kurunthogai குறுந்தொகை # 270


Let the rain pour with thunder. (Image) I am returning home finishing my duty. I am going to enjoy sleeping on the mattress of my wife’s hair in warm. – He says.

This is a poem compiled by PANDIYAN PANNAADU THANTHAAN (a Pandiya King attached several countries to his territory)
2nd century B.C.

270. முல்லை

தாழ் இருள் துமிய மின்னி, தண்ணென
வீழ் உறை இனிய சிதறி, ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப்
பெய்க, (படம்) இனி; வாழியோ, பெரு வான்! யாமே,
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
இவளின் மேவினம் ஆகி, குவளைக்
குறுந் தாள் நாள்மலர் நாறும்
நறு மென் கூந்தல் மெல் அணையேமே.

வினைமுற்றிப் புகுந்த தலைமகன் கிழத்தியோடு உடனிருந்து கூறியது.

பாண்டியன் பன்னாடு தந்தான் பாடல்

இனி இடியுடன் கூடிய மழை பொழியட்டும். என் பணி முடிந்து நான் மீண்டுகொண்டிருக்கிறேன். குவளை மலரின் மணம் கமழும் என்னவளின் கூந்தல் மெத்தையில் உறங்குவேன்.   

No comments:

Post a Comment