The
lady is conversing with her friend.
This
is a poem compiled by SERAMAN SAATHAN of Karur village
2nd century B.C.
268.
நெய்தல்
''சேறிரோ?'' எனச் செப்பலும் ஆற்றாம்;
''வருவிரோ? என வினவலும் வினவாம்;
யாங்குச்
செய்வாம்கொல்? தோழி! பாம்பின்
பையுடை
இருந் தலை (படம்) துமிக்கும் ஏற்றொடு
நடு
நாள் என்னார், வந்து,
நெடு
மென் பணைத் தோள் அடைந்திசினோரே.
தலைமகன்
சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.
கருவூர்ச் சேரமான் சாத்தன் பாடல்
இடி படமெடுத்து
ஆடும் பாம்பின் தலையைத் துண்டாக்கும். நள்ளிரவில் அப்படிப்பட்ட இடி முழங்கும் வேளையில்
வந்து அவர் என் தோளைத் தழுவினார். அவர் பிரிந்து (பொருள் தேடச்) செல்லும்போது போகிறீரா
எனு கேட்கவோ, எப்போது வருவீர்கள் என்று வினவவும் முடியவில்லை.
No comments:
Post a Comment