Why?
I
know the truth that the Death God is eating my day of life.
This
is a poem compiled by KAAL-ERI-KADIGAIYAR
2nd century B.C.
267.
பாலை
இருங்
கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம்
ஒருங்குடன்
இயைவது ஆயினும், கரும்பின்
கால்
எறி கடிகைக் கண் அயின்றன்ன
வால்
எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்க்
கோல்
அமை குறுந் தொடிக் குறுமகள் ஒழிய,
ஆள்வினை
மருங்கில் பிரியார் நாளும்
உறல்
முறை மரபின் கூற்றத்து
அறன்
இல் கோள் நன்கு அறிந்திசினோரே.
''மேல்நின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின், நாமும்
பொருட்குப் பிரிதும்'' என்னும் நெஞ்சிற்கு, நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறி, செலவு
அழுங்கியது.
காலெறி
கடிகையார் பாடல்
கரும்பை
அடியில் வெட்டும் கடிகையில் (கத்தியில்) படியும் சாறு போல அவள் வாய்ப்பல் இதழில் வழியும்
நீரை உண்பதை விட்டுவிட்டு வரமாட்டேன் – என்கிறான் அவன்.
முறையாக
மரபாக வந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு நாளையும் எமன் தனதாக்கிக் கொண்டிருக்கும் அறமல்லாத
கோட்பாட்டை நன்றாக அறிந்தவர் யாரும் உலக நலமெல்லாம் ஒருங்கு பயக்கவல்லதாயினும் அப்
பொருள் தேடும் முயற்சியில் இளம் மனைவியை விட்டுப் பிரியமாட்டார்கள்.
No comments:
Post a Comment