Pages

Tuesday, 12 August 2014

Love poem Kurunthogai குறுந்தொகை # 265


He is a man of favorable heart. When I informed him your critical position he nods down his head with shame.
Flower KAANDAL, (Gloriosa superba Agni sikha Kari hari Kandal image) will be opening its petals even in budding stage allowing pestles as a man of greatness keeps his wealth to enjoy others.
He is a Man of the land such wild lily.    

This is a poem compiled by KATHAPPILLAI of Karur village
2nd century B.C.

265. குறிஞ்சி

காந்தள்அம் கொழு முகை, (படம்) காவல்செல்லாது,
வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும்
தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடன் அறி மாக்கள் போல, இடன் விட்டு,
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்
நன்னர் நெஞ்சத்தன் தோழி! நின் நிலை
யான் தனக்கு உரைத்தனென் ஆக,
தான் நாணினன், இஃது ஆகாவாறே.

வரையாது பிரிந்த இடத்து, ''அவர் பிரிந்த காரணம் நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தான்'' எனத் தோழி தலைமகட்குக் கூறியது.

கருவூர்க் கதப்பிள்ளை பாடல்

கடமை உணர்ந்த சான்றோர் தம் செல்வத்தைப் பாதுகாக்காமல் எல்லாரும் துய்க்கும்படி திறந்து வைத்திருப்பது போல காந்தள் மலரின் மொட்டுகூட வண்டு வாய் வைத்துத் தேன் உண்ணும்படி திறந்தே இருக்கும் நாட்டினை உடையவன் அவன்.
தோழி!

அவன் நல்ல நெஞ்சம் கொண்டவன். (அவனை எண்ணி நீ வாடும்) உன் நிலையை உரைத்ததும் நாணினான். 

No comments:

Post a Comment