Pages

Tuesday, 12 August 2014

Love poem Kurunthogai குறுந்தொகை, காதல் 263


MURUGU Ceremony
Cutting the larynx of a lamb, beating the girl with the step of yellow millet plant, raising music in several instrument in streets joining corner, hailing various Deities, saying she is caught by Devil and no other medicine other than beating – are the ceremonial functions in MURUDU home festive.
This is done for me is right because I offered my chastity of womanhood to him, a Man of mountain rain-clouds play on.      
The friend confesses to her lady while lover is waiting to meet the lady.  

This is a poem compiled by PERUNJAATHAN
2nd century B.C.

263. குறிஞ்சி

மறிக் குரல் அறுத்து, தினைப் பிரப்பு இரீஇ,
செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்க,
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந் தெய்வம் பல உடன் வாழ்த்தி,
''பேஎய்க் கொளீஇயள்'' இவள் எனப்படுதல்
நோதக் கன்றே தோழி! மால் வரை
மழை விளையாடும் நாடனைப்
பிழையேம் ஆகிய நாம் இதற் படவே.

''அன்னை வெறி எடுக்கக் கருதாநின்றாள்; இனி யாம் இதற்கு என்கொலோ செயற்பாலது?''எனத் தோழி தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகக் கூறியது.

பெருஞ்சாத்தன் பாடல்

தோழி! ஆட்டுக்குட்டியின் கழுத்தை அறுத்து, தினைப்பிரம்பால் அடித்து, வழி பிரியும் முக்கட்டில், பல இசைக்கருவிகள் முழங்க, இவளின் மாறுபட்ட தோற்றத்துக்கு வேறு மருந்து இல்லை என்று கூறிக்கொண்டு, முருகனோடு பல்வேறு தெய்வங்களையும் சேர்த்து வாழ்த்திக்கொண்டு, இவளுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று சொல்லி ஆட்டப்படுதல் துன்பம் தரத் தக்கதுதான். மழை விளையாடும் நாடனுக்குப் பிழையின்றி அளித்தமைக்கு இது தக்கதுதான். 

No comments:

Post a Comment