This
is a poem compiled by EITRI daughter or wife of KEERAN, native of KAZAAR village
2nd century B.C.
261.
குறிஞ்சி
பழ
மழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய
சிதட்டுக்
காய் எண்ணின் சில் பெயற் கடை நாள்,
சேற்று
நிலை முனைஇய செங் கட் காரான்,
நள்ளென்
யாமத்து,
''ஐ'' எனக் கரையும்
அஞ்சுவரு
பொழுதினானும், என் கண்
துஞ்சா
வாழி தோழி! காவலர்
கணக்கு
ஆய் வகையின் வருந்தி, என்
நெஞ்சு
புண் உற்ற விழுமத்தானே.
இரவுக்குறிக்கண்
தலைமகன் சிறைப்புறமாக, தலைமகள் தோழிக்குச்
சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கழார்க்
கீரன் எயிற்றி பாடல்
வழக்கம்
போல் மழை பொழிந்ததும் கறையான் புற்றிலுள்ள எண்ணிலடங்கா அதன் முட்டைக் காய்கள் உருகின.
(ஈசலாகிப் பறந்தன) சேற்றில் கிடந்த எருமை அதனைப் பார்த்து “ஐ” என்று ஒலி எழுப்பிக்
கரைந்தது. இப்படி அச்சம் தரும் நள்ளிரவில் கூட என் கண் தூங்கவில்லை. வருமான வரி கணக்கிட
ஆராயும் காவலர் போலவும், வருமானக்காரர் போலவும் என் மனம் துன்பப்பட்டுக்கொண்டிருந்தது.
No comments:
Post a Comment