He,
the partner went away through the arid forest where tree OMAI bestows the
single young-less cow.
That
land was ruled over by THONDAIYAR dynasty that is famous in offering chariot. Those
dynasty fed by winning other’s land.
This
is a poem compiled by KALLAADANAAR
2nd century B.C.
260.
பாலை
குருகும்
இரு விசும்பு இவரும்; புதலும்
வரி
வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே;
சுரிவளைப்
பொலிந்த தோளும் செற்றும்;
வருவர்கொல்
வாழி தோழி! பொருவார்
மண்
எடுத்து உண்ணும் அண்ணல் யானை
வண்
தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து,
கன்று
இல் ஓர் ஆ விலங்கிய
புன்
தாள் ஓமைய சுரன் இறந்தோரே.
அவர்
வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத்
தோழி சொல்லியது.
கல்லாடனார் பாடல்
தோழி,
வாழி,
குருகு
வானத்தில் பறக்கிறது. புதர்கள் வண்டுகள் தேன் உண்ண மலர்ந்துகிடக்கின்றன. தோளில் நழுவிய
வளையல் செறிவு பெறுகிறது. அவர் வருகிறார் போலும்.
தொண்டை
நாட்டு மலை வழியாக அவர் சென்றார்.
பிற நாட்டு
மண்ணை உண்ணும் (வென்று தனதாக்கிக்கொள்ளும்) தொண்டையர்.
யானைமேல்
செல்லும் தொண்டையர்.
தேர்
வழங்கும் தொண்டையர்.
வழை மரங்கள்
மிக்கது தொண்டையர் நாடு.
கன்று
இல்லாத தனிப் பசுவையும் விலங்கிடுவதுபோல் பாதுகாக்கும் பாலைக்காடு உடையது தொண்டை நாட்டுச்
சுரன்.
No comments:
Post a Comment