This
is a poem compiled by KABILAR
2nd century B.C.
259.
குறிஞ்சி
மழை
சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து,
அருவி
ஆர்ந்த தண் நறுங் காந்தள்
முகை
அவிழ்ந்து, ஆனா நாறும் நறு நுதல்,
பல்
இதழ் மழைக் கண், மாஅயோயே!
ஒல்வை
ஆயினும்,
கொல்வை ஆயினும்,
நீ
அளந்து அறிவை நின் புரைமை; வாய்போல்
பொய்ம்
மொழி கூறல் அஃது எவனோ?
நெஞ்சம்
நன்றே,
நின் வயினானே.
காப்பு
மிகுதிக்கண் ஆற்றாளாகிய தோழி அறத்தொடு நின்று, ''யானே பரி
கரிப்பல்''என்று கருதியதனைத் தலைமகளும் நயப்பாளாகக் கூறியது.
பரணர்
பாடல்
அறத்தொடு
நிற்றல் என்பது பெற்றோர்களுக்குக் களவு-ஒழுக்கம் பற்றி முறைப்படி எடுத்துரைத்தல்.
தோழி
சொல்கிறாள்.
ஒல்வை
= ஏற்றுக்கொள்வாய்
கொல்வை
= ஏற்றுக்கொள்ளாமல் தள்ளுவாய்
காந்தள்
மணம் கமழும் நெற்றியும் பூமழை பொழியும் கண்ணும் உடைய மாயவளே! நீ ஏற்றுக்கொண்டாலும்,
கொள்ளாவிட்டாலும் உன் மேன்மையை எண்ணிப்பார். உன் நெஞ்சு நினைப்பதை வாயால் கூறிவிடு.
No comments:
Post a Comment