(Dual
inference)
Please
come to our street and give your bouquet.
Her
beauty like AARCAD village river bath-bank becomes fade without tour presence.
AARCOD
is a village (in Thanjavur distract) ruled by the king SENTHAN and his father AZISI
once was tied in MARUTHAM tree for his enforcement of love;
Such
an occurrence may happen.
images MARUTHAM fruit (top) tree (bottom)
This
is a poem compiled by KABILAR
2nd century B.C.
வாரல்
எம் சேரி;
தாரல் நின் தாரே;
அலரா
கின்றால் பெரும! காவிரிப்
பலர்
ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த
ஏந்து
கோட்டு யானைச் சேந்தன் தந்தை,
அரியல்அம்
புகவின் அம் கோட்டு வேட்டை
நிரைய
ஒள் வாள் இளையர் பெருமகன்
அழிசி
ஆர்க்காடு அன்ன இவள்
பழி
தீர் மாண் நலம் தொலைவன கண்டே.
படம் - மேலே மருதங்காய் - கீழே மருத மரம்
படம் - மேலே மருதங்காய் - கீழே மருத மரம்
தோழி
தலைமகற்கு வாயில் மறுத்தது; வாயில் நேர்ந்ததூஉம். ஆம்.
பரணர்
பாடல்
எம்
தெருப்பக்கம் வராதே. உன் மாலையைத் தராதே. (மற்றொரு பொருள்) எம் ஊருக்கு வருக. உன் மாலையைத் தருக.
ஊர் வாயெல்லாம்
பூக்கும் அலர் ஆகிறது. சேந்தன் தந்தை அழிசியை ஆர்க்காடு என்னும் ஊரில் காவிரி ஆற்றுத்
துறையில் மருத மரத்தில் கட்டி வைத்தது போல ஊருக்கெல்லாம் தெரிந்துவிட்டது. அந்தக் காவிரித்
துறை போன்ற இவள் அழகும் உன்னை நினைத்துக் கெட்டுவிட்டது.
சேந்தன்
இவன் போருக்கு எழும்போது களிற்றின்மீது செல்வான். வாள்வீரர்கள் சூழச் செல்வான். அவர்கள்
அரியல் என்னும் அரிசிக் கஞ்சியை உணவாக்கிக்கொண்டு பகைவர் யானையைப் போர்க்களத்தில் வேட்டையாடுவர்.
(இளையர் = வாலிப வீரர்)

No comments:
Post a Comment