Pages

Sunday, 10 August 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 257


Love is a relation that grows like jack fruit in root, trunk and branches of its tree.
Jack tree
This is a poem compiled by SIRU-KANDAN of Uraiyur village
2nd century B.C.

257. குறிஞ்சி

வேரும் முதலும் கோடும் ஒராங்குத்
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக்
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோட் பலவின்
ஆர்கலி வெற்பன் வருதொறும், வரூஉம்;
அகலினும் அகலாதாகி
இகலும் தோழி! நம் காமத்துப் பகையே.

வரைவு உணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

உறையூர்ச் சிறுகந்தன் பாடல்

வேர், அடிமரம், கிளை எல்லாவற்றிலும் ஒன்றுபோலப் பழுத்துத் தொங்கும் பலா மரங்களை உடைய நாடன் அவன். அவன்மீது உள்ள காமப் பகை இருவரும் விலகி இருக்கும்போதும் விலகாமல் போராடி ஒன்றாகவே இருக்கிறது. 

No comments:

Post a Comment