This
is a poem compiled by an unknown poet
2nd century B.C.
256.
பாலை
''மணி வார்ந்தன்ன மாக் கொடி அறுகைப் (படம்)
பிணங்கு
அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி,
மான்
ஏறு உகளும் கானம் பிற்பட,
வினை
நலம் படீஇ, வருதும்; அவ் வரைத்
தாங்கல்
ஒல்லுமோ,
பூங்குழையோய்?'' எனச்
சொல்லா
முன்னர்,
நில்லா ஆகி,
நீர்
விலங்கு அழுதல் ஆனா,
தேர்
விலங்கினவால், தெரிவை கண்ணே.
பொருள்
வலிக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது.
மணிநிறம்
(பசுமை) கொண்ட அறுகம்புல் புதரில் தன் பெண்ணுடன் சேர்ந்து மேய்ந்துவிட்டு மான் துள்ளி
விளையாடும் காட்டு வழியில் அரசன் ஆணைப்படி சென்று மீளவிருக்கிறேன். தங்கிக்கொள்ள முடியுமா
பூங்குழை என்று அவன் அவளைக் கேட்டான்.
அவன்
செல்லும் முன்பே அரசன் ஆணையாயிற்றே என்று ஆராய்ந்து பார்க்காமல் அவள் கண்களிலிருந்து
நீர் நில்லாமல் கொட்டின.

No comments:
Post a Comment