Pages

Sunday, 10 August 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 255


He went to earn money. On the way he will happened to see male elephant struck its tusk in YAA tree (caryota urens(and feed its family. (On seeing this habit he will return soon).  
Images
YAA tree (caryota urens) Kuunthal Palmyra, Tippili Palmyra, Kitul Palmyra  
யாஅ மரம், கூந்தல் பனை, திப்பிலிப் பனை, கித்துல் பனை 

This is a poem compiled by KADUDU PERUNDEVAN
2nd century B.C.

255. பாலை

பொத்து இல் காழ அத்த யாஅத்துப்
பொரி அரை முழுமுதல் உருவ குத்தி,
மறம் கெழு தடக் கையின் வாங்கி, உயங்கு நடைச்
சிறு கட் பெரு நிரை உறு பசி தீர்க்கும்
தட மருப்பு யானை கண்டனர் தோழி!
தம் கடன் இறீஇயர் எண்ணி, இடம்தொறும்
காமர் பொருட்பிணிப் போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே.

''இடைநின்று மீள்வர்'' எனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.

கடுகு பெருந்தேவன் பாடல்

தோழி! பொருள் தேடித் தன் கடமையை நிறைவேற்ற நம் இனிய காதலர் சென்ற வழியில் பொந்து இல்லாத சதைப்பற்று உள்ள யா மரத்தை யானை தன் தந்தக் கொம்புகளால் குத்தி இனத்தின் பசியைப் போக்குவது கண்டு விரைவில் மீள்வர்.

No comments:

Post a Comment