Tree
KONGAM started blossoming without leaves to feast honey birds.
He
forgets happy sleep on my hair of mattress in night all are enjoying.
This
is a poem compiled by PAARKAAPAAN meaning a saver of world
2nd century B.C.
254.
பாலை
இலை
இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப,
முலை
ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின்
தலை
அலர் வந்தன; வாரார் தோழி!
துயில்
இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்;
பயில்
நறுங் கதுப்பின் பாயலும் உள்ளார்
''செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர்
எய்தினரால்'' என, வரூஉம் தூதே.
பருவம்
கண்டு வற்புறுத்துந் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
பார்காப்பான்
பாடல்
தோழி!
கோங்க மரம் இலை இல்லாமல் உதிர்ந்து வண்டு மொய்க்கும்படி பூக்கத் தொடங்கிவிட்டது. (கார்காலம்
வந்துவிட்டது) அவர் வரவில்லை. எல்லாரும் உறங்கும் இரவில் என் கூந்தல் மெத்தையில் படுத்து
உறங்கும் இன்பத்தை அவர் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எல்லா நலன்களையும் செய்யும்
பொருள் தேடிக்கொண்டு வரச் சென்றிருக்கிறார் என்று அவர் அனுப்பிய தூது வந்திருக்கிறது.

No comments:
Post a Comment