This
is a poem compiled by POONKANNAN
2nd century B.C.
253.பாலை
கேளார்
ஆகுவர் தோழி! கேட்பின்,
விழுமிது
கழிவது ஆயினும், நெகிழ்நூல்
பூச்
சேர் அணையின் (படம்) பெருங் கவின் தொலைந்த நின்
நாள்
துயர் கெடப் பின் நீடலர் மாதோ
ஒலி
கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல்,
புலி
புகா உறுத்த புலவு நாறு கல் அளை
ஆறு
செல் மாக்கள் சேக்கும்
கோடு
உயர் பிறங்கல் மலை இறந்தோரே
பிரிவிடைத்
தோழி வற்புறுத்தியது.
பூங்கண்ணன் பாடல்
பூங்கண்ணன் பாடல்
நெகிழ்நூல் = பட்டுநூல்
உன்
சொல்லைக் கேளாமல் மூங்கில் ஓங்கிய மலைச்சாரலில் புலி உணவு உண்ட புலவு நாற்றம் வீசும்
கல்லுக் குகையில் தங்கிச் செல்லும் அவர் பட்டு மெத்தை போன்ற உன் மேனி அழகு குலைந்ததைக்
கேட்டால் ஒரு நாள் கூட அங்குத் தங்காமல் மீள்வார், தோழி’
என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

No comments:
Post a Comment