Pages

Saturday, 9 August 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 252


He is a bad man making your bangles in arm loose. When he comes you foster him on the name of Duty. It is madness, says her friend.
The lady replied.
Gentlemen bend down their heads when they are praised. He praises me. How can I tolerate blame falls on him?

This is a poem compiled by KIDANGIL KULAPATI NAKKANNAN
2nd century B.C.

252. குறிஞ்சி

நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன்
வருவதோர் காலை, இன் முகம் திரியாது,
கடவுட் கற்பின் அவன் எதிர் பேணி,
''மடவை மன்ற நீ'' எனக் கடவுபு
துனியல் வாழி தோழி! சான்றோர்
புகழும் முன்னர் நாணுப;
பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே?

தலைமகன் வரவறிந்த தோழி, ''அவர் நம்மை வலிந்து போயினார்க்கு எம் பெருமாட்டி தீயன கடிந்து நன்கு ஆற்றினாய்!'' என்றாட்குக் கிழத்தி உரைத்தது.

கிடங்கில் குலபதி நக்கண்ணன் பாட்டு

நாடன் தோள்வளையலை நெகுழும்படிச் செய்த கொடியவன். அவன் வரும்போது அவனைக் கடவுள் கற்பு என்னும் பெயரால் பேணுவது மடத்தனம் இன்கிறாயே தோழி, அது எப்படி மடமை ஆகும்?
புகழ்பவருக்கு முன்னால் சான்றோரே நாணுவர். (நான் எம்மாத்திரம்) அவனுக்குப் பழி என்றால் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தலைவி இப்படிச் சொல்கிறாள்.

No comments:

Post a Comment