Pages

Friday, 8 August 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 251


Benevolent Madam! This is not a rainy season. It is folly. It rains merely to refresh the old water its kind. Hearing the thunder the poor peacock family is also dancing. Flower PIDAVAM (randia_malabarica) is also blossoming. Pease believe in my words and get relief of wavering thought. – Friend-maid consoles her lady.

Flower PIDAVAM is a kind of seasonal punch of flowers in Tamil Nadu, India blossoms only three or four days after the first rain fall at the end of summer. It will disappear until the next kind of season that will fall on next year. The fragrant of the flower smells like MALLIGAI flower.

This is a poem compiled by IDAIK-KAADAN  
2nd century B.C.

251. முல்லை

மடவ வாழி மஞ்ஞை மா இனம்
கால மாரி பெய்தென, அதன் எதிர்
ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன;
கார் அன்று இகுளை! தீர்க, நின் படரே!
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர்,
புது நீர் கொளீஇய, உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே.

பிரிவிடைத் தோழி. ''பருவம் அன்று; பட்டது வம்பு'' என்று வற்புறுத்தியது.

இடைக்காடன் பாடல்

இகுளை! (அன்பு பொழியும் தோழி) இது (அவர் மீள்வதாகச் சொன்ன) கார் காலம் அன்று. பழைய நீர் புதுநீர் ஆவதற்கு அவற்றின் அயலதான வானம் முழங்குகிறது. அதனை கேட்டு மயில் கூட்டம் முன்பு பெய்த மழையை எண்ணி மடத்தனமாக ஆடவும் செய்கின்றன. பிடவம் பூக்களும் பூத்துவிட்டன. (அவ்வளவுதான்) – இவ்வாறு கூறித் தோழி தலைவியை ஏமாற்றுகிறாள்.

பிடவம் பூவைக் குட்டிப்பிலாத்தி என்றும் காட்டுமல்லி என்றும் கூறுவர். இது கோடைகாலம் முடிந்து புதுமழை பொழிந்த அடுத்த நாளில் அரும்பு விட்டு அடுத்த இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே பூத்திருக்கும். பூத்த பூ ஒருநாள் மட்டுமே உயிர் வாழும். அதன் வழியெல்லாம் மணக்கும். பின்னர் பெய்யும் மழையால் அது பூக்காது. அடுத்த ஆண்டு அதே பருவநிலை வரும்போது மீண்டும் அதே போலப் பூத்து மறையும். வெள்ளை வெளேர் என அதிகாலையில் பூக்கும். மறுநாள் உதிர்ந்துவிடும். புதிதாக அரும்பு தோன்றிப் பூப்பதும் ஓரிரு நாட்கள் மட்டுமே நிகழும். மகளிர் பறித்துச் சூடிக்கொள்ளும்போது சில மணி நேரம் மட்டுமே மணக்கும். பின்னர் அழுகிவிடும்

No comments:

Post a Comment