The
friend-maid consoled her lady.
This
is a poem compiled by ULOCHAN
2nd century B.C.
248.
நெய்தல்
அது
வரல் அன்மையோ அரிதே; அவன் மார்பு
உறுக
என்ற நாளே குறுகி,
ஈங்கு
ஆகின்றே தோழி! கானல்
ஆடு
அரை புதையக் கோடை இட்ட
அடும்பு
இவர் மணற் கோடு ஊர, நெடும் பனை (படம்)
குறிய
ஆகும் துறைவனைப்
பெரிய
கூறி யாய் அறிந்தனளே.
வரைவு
நீட்டித்தவழி, ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி ஆற்றுவித்தது.
உலோச்சன்
பாடல்
உன் துறைவனை
அன்னை அறிந்துகொண்டாள். கானலில் ஆடி அசையும் நிழல் புதையும்படி கோடைக்காற்று (மேலைக்காற்று)
வீசி உண்டாக்கிய மணல் மேட்டால் குட்டையாகிவிட்ட பனைமரத்தில் அடும்புக்கொடி ஏறிப் படரும்
துறைவன் அவன். எனவே அவன் மார்பை நீ அடையும் நாள் இங்கு நெருங்கிவிட்டது. அந்த நாள்
வரல் அன்மை அரிது. (வருவது உறுதி) தோழி, கவலை வேண்டாம். – இவை தோழி கூற்று.

No comments:
Post a Comment