His
harmless chest is beautiful to hug your breast. To accept him is a good deed. It
will be helpful to your relatives also.
He
is a Man of the mountain the sighing of sleeping elephant (image) makes fall VENGAI flowers
from the tree above its lay.
This
is a poem compiled by SENTHAM BOODAN
2nd century B.C.
247.
குறிஞ்சி
எழில்
மிக உடையது; ஈங்கு அணிப்படூஉம்;
திறவோர்
செய்வினை அறவது ஆகும்;
கிளையுடை
மாந்தர்க்குப் புணையுமார் இவ், என
ஆங்கு
அறிந்திசினே தோழி! வேங்கை
வீயா
மென் சினை வீ உக, யானை
ஆர்
துயில் (படம்) இயம்பும் நாடன்
மார்பு
உரித்து ஆகிய மறு இல் நட்பே.
கடிநகர்த்
தெளிவு விலங்கினமை அறிய, தோழி கூறியது;
வரைவு உடன்பட்ட தோழி தலைமகட்குக் கூறியதூஉம் ஆம். –
சேந்தம்பூதன் பாடல்
வரைவு உடன்பட்ட தோழி தலைமகட்குக் கூறியதூஉம் ஆம். –
சேந்தம்பூதன் பாடல்
தோழி! (தோழி தலைவியை விளிக்கிறாள்) நாடன் மார்பு உனக்கு உரியதாயிற்று.
அது எழில் மிக்கது. ஈங்கு உன் மார்பில் அணியத்
தக்கது. அவன் திறவோன். அவன் செய்வினை உன்
உறவுக்காரர்களுக்கும் வாழ்வுப் புணையாக அமையும். இதனை அறிந்துகொண்டேன்.
(நீ அவனை ஏற்றுக்கொள்)
யானை
தூங்கும்போது ஓசையுடன் விடும் பெருமூச்சால் வேங்கைப் பூக்கள் உதிரும் நாட்டினை உடைவன்
அவன்.

No comments:
Post a Comment