This
is a poem compiled by KAPILAR
2nd century B.C.
246.
நெய்தல்
''பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை (படம்)
களிற்றுச்
செவி அன்ன பாசடை மயக்கி,
பனிக்
கழி துழவும் பானாள், தனித்து ஓர்
தேர்
வந்து பெயர்ந்தது'' என்ப. அதற்கொண்டு,
ஓரும்
அலைக்கும் அன்னை; பிறரும்
பின்னு
விடு கதுப்பின் மின் இழை மகளிர்
இளையரும்
மடவரும் உளரே;
அலையாத்
தாயரொடு நற்பாலோரே.
சிறைப்புறம்.
கபிலர்
பாடல்
கடலோரம்
நள்ளிரவில் ஒரு தேர் தனியே வந்து போயிற்று என்று தாய் உய்த்துணர்ந்து என்னைத் துன்புறுத்துகிறாள்.
தாயோடு சேர்ந்து துன்புறுத்தும் என் தம்பியரும் மற்ற பெண்களும் நல்லவர்கள்தான். (இவ்வாறு
தலைவியும் தோழியும் பேசிக்கொள்கின்றனர். தலைவன் தொலைவிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறான்)
பெருங்கடலின்
கரையில் இருக்கும் ஈரமான உப்பங்கழியில் சிறிய வெண்ணிறக் காக்கை யானைக்காது போல் இருக்கும்
இலைக்கு அடியில் இருக்கும் மீன் இரையைத் துளாவிக்கொண்டிருக்கும் நள்ளிரவு நேரம் அது.

Seagull என்ற இந்த வெள்ளைப் பறவைகள் இங்கு ஆஸ்திரேலியாவில் நிறைய உண்டு. 'வெள்ளக்காக்கா பறக்குது" என்று யாராவது சொன்னால் நம்பமாட்டோம். கபிலர் அக்காலத்திலேயே 'வெண்காக்கை" என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் என்பதை அறிய மகிழ்ச்சியாக உள்ளது. அதை எடுத்துக் காட்டியமைக்கு நன்றி ஐயா.
ReplyDeleteஅன்பு பொழியும் அன்பு மழையில் நனைகிறேன்
Delete