This
is a poem compiled by KANNAN
2nd century B.C.
244.
குறிஞ்சி
பல்லோர்
துஞ்சும் நள்ளென் யாமத்து,
உரவுக்
களிறுபோல் வந்து, இரவுக் கதவு முயறல்
கேளேம்
அல்லேம்;
கேட்டனெம் பெரும!
ஓரி
முருங்கப் பீலி சாய
நல்
மயில் (படம்) வலைப் பட்டாங்கு, யாம்
உயங்குதொறும்
முயங்கும், அறன் இல் யாயே.
இரவுக்குறி
வந்து ஒழுகாநின்ற தலைமகனைத் தாம் காவல் மிகுதியால் புறப்பட்டு எதிர்கொள்ளப்
பெறாதவழி,
பிற்றை ஞான்று தோழி, ''வரைந்து கொள்ளின்
அல்லது இவ்வொழுகலாற்றின் இனிக் கூடல் அரிது" என வரைவு கடாயது.
கண்ணன்
பாடல்
எல்லாரும்
உறங்கும் யாமத்தில் வலிமை மிக்க யானை போல நீ கதவைத் திறக்கும் ஓசையை நான் கேட்காமல்
இல்லை. மயில் அதன் தோகையுடன் வலையில் மாட்டிக்கொண்டது போல உன்னவள் உன்னிடம் வரப் புரளும்போதெல்லாம்
உன்னவளை அவள் தாய் கட்டி அணைக்கும் பிடியில் மாட்டிக்கொண்டிருக்கிறாள். – தோழி தலைவனுக்குக்
கூறுகிறாள்.

No comments:
Post a Comment