She
is living in a small village situated in meadow where jungle fowl (image) clear the
water drop by shaking its neck.
She
is happy because her husband returns back immediately when he leaves her on
duty of the king’s command.
This
is a poem compiled by KUZAL THATHAN
2nd century B.C.
242.
முல்லை
கானங்கோழிக்
கவர் குரற் சேவல் (படம்)
ஒண்
பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பப்
புதல்
நீர் வாரும் பூ நாறு புறவில்
சீறூரோளே, மடந்தை; வேறு ஊர்
வேந்து
விடு தொழிலொடு செலினும்,
சேந்து
வரல் அறியாது, செம்மல் தேரே.
கற்புக்
காலத்துக் கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது.
குழற்றத்தன்
பாடல்
அவள்
முல்லை நிலத்துச் சிற்றூரில் வாழ்கிறாள். அவன் வேந்தன் ஆணைப்படி போருக்குச் சென்றாலும்
அங்கேயே தங்கிவிடாமல் விரைவில் தேரில் திரும்பிவிடுவான்.
இரட்டைக்
குரல் எழுப்பும் காட்டுக்கோழி புதர்ப் பூவிலிருந்து விழுந்த நீர்த்திவலைகளை கழுத்தைச்
சிலிர்த்து உதரிக்கொள்ளும் புறவு (முல்லை) நிலம் அவள் வாழும் ஊர்.
(அவளும்
தனக்கு வரும் இன்னல்களை உதரித் தள்ளிவிட்டு மகிழ்வாக வாழ்கிறாள்).

Nice explanation
ReplyDelete