I
can tolerate my lust feeling. But my eyes refuse dropping water for he is in
their sight. This is the position. What shall I do?
He
is a Man of mountain slope where the children after letting their calves eat
grass makes joyous cry on seeing flower VENGAI budding instead of playing climbing
on tree, the sound that echoes against the canyon in the mountain. (Image)
This
is a poem compiled by KAPILAR
2nd century B.C.
241.
குறிஞ்சி
யாம்
எம் காமம் தாங்கவும், தாம் தம்
கெழுதகைமையின்
அழுதன தோழி!
கன்று
ஆற்றுப்படுத்த புன் தலைச் சிறாஅர்
மன்ற
வேங்கை மலர் பதம் நோக்கி,
ஏறாது
இட்ட ஏமப் பூசல்
விண்
தோய் விடரகத்து (படம்) இயம்பும்
குன்ற
நாடற் கண்ட எம் கண்ணே.
பிரிவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கபிலர்
பாடல்
தோழி,
நான் என் காம உணர்ச்சிகளைத் தாங்கிக்கொண்டாலும் குன்ற நாடனைக் கண்ட என் கண் அதன் கெழுதகை
நட்பால் அழுகிறது. (நான் என்ன செய்யமுடியும்)
சிறுவர்கள்
கன்றுகளை மேய விட்டுவிட்டு ஊர் மன்றத்தில் வேங்கைமரம் பூப்பதைப் பார்த்து அதன்மீது
ஏறி விளையாடாமல் போடும் கூச்சல் குன்றெங்கும் எதிரொல்லிக்கும் நாடு அவன் நாடு.

No comments:
Post a Comment