Snow
drizzling wind from north is blowing. Plant flat-beans are blossoming flower
like parrot’s mouth. Flower ‘mullai’ blossoms like teeth of wild cat. Even then
he did not return. So his mountain seems to my eyes dimming as the ship
sinking. (Image)
This
is a poem compiled by Blacksmith AZISI
2nd century B.C.
240.
முல்லை
பனிப்
புதல் இவர்ந்த பைங் கொடி அவரைக்
கிளி
வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர்
வெருக்குப்
பல் உருவின் முல்லையொடு கஞலி,
வாடை
வந்ததன் தலையும், நோய் பொர,
கண்டிசின்
வாழி தோழி! தெண் திரைக்
கடல்
ஆழ் கலத்தின் (படம்) தோன்றி,
மாலை
மறையும்,
அவர் மணி நெடுங் குன்றே.
வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கொல்லன்
அழிசி.
பனியில்
பூக்கும் அவரை கிளியின் வாயைப்போல் பூத்திருக்கிறது. முல்லைப்பூ காட்டுப் பூனையின்
பல் போலப் பூத்திருக்கிறது. இப்படி வாடைக்காற்று வீசும் பருவகாலம் வந்த பின்னரும் அவர்
திரும்பி வராததால் என் கண் பூத்துப் போய் கடலில் ஆழும் மரக்கலம் போல அவர் குன்றம் மாலை
நேரத்தில் மறைகிறது.

No comments:
Post a Comment