In
crave my shoulder is leaning; bangles are losing. In such a position why I
hesitate to hug him?
(He
is waiting)
He
is a Man of the mountain where honey-bird is eating in wild lily that smells
all over the over canyon of the mountain that seems like a cobra spiting blue
diamond. (image – shaped blue diamond)
This
is a poem compiled by Teacher PERUN KANNAN
2nd century B.C.
239.
குறிஞ்சி
தொடி
நெகிழ்ந்தனவே; தோள் சாயினவே;
விடும்
நாண் உண்டோ? தோழி! விடர் முகைச்
சிலம்புடன்
கமழும் அலங்கு குலைக் காந்தள்
நறுந்
தாது ஊதும் குறுஞ் சிறைத் தும்பி
பாம்பு
உமிழ் மணியின் (படம் – பட்டை
தீட்டப்பட்ட மணி) தோன்றும்
முந்தூழ்
வேலிய மலைகிழவோற்கே.
சிறைப்புறம்.
ஆசிரியன் பெருங்கண்ணன் பாடல்
தோழி, அவன் மலைநாடன். அங்குக் காந்தள் மலர் மலைப்பிளவுக் குகை
முழுவதும் கமழும். அதில் தேன் உண்ணும் தும்பி நாகப்பாம்பு மணி
உமிழ்வது போல் தோன்றும். இப்படிப்பட்ட மலைநிலப் பகுதி அவன் வேலிநிலம்.
அவனை எண்ணி அவனைத் தழுவிய தோள் வாடுகிறது. கையில்
வளையல் கழல்கிறது. இந்த நிலையில் நாணம் எதற்கு? (அவனைத் தழுவ வேண்டியதுதான்)

No comments:
Post a Comment