Pages

Saturday, 2 August 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 238


She is as happy as girls in TONDI village where the girls play game VANDAL placing their rice serial pounding wood rod (image - ladies pounding) on the bank of the paddy field. (While you were at your concubine’s house she lost her happiness). If you want to take her to enjoy, please give first her past happiness.  
Her friend-maid defies his (hero) request to enter his house.

This is a poem compiled by KUNTRIYAN
2nd century B.C.

238. மருதம்

பாசவல் இடித்த கருங் காழ் உலக்கை
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி,
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
தொண்டி அன்ன என் நலம் தந்து,
கொண்டனை சென்மோ மகிழ்ந! நின் சூளே.

தலைமகன் பரத்தையின் மறுத்தந்து, வாயில் வேண்டித் தோழியிடைச் சென்று, தெளிப்பான் புக்காற்குத் தோழி சொல்லியது.

குன்றியன் பாடல்

தொண்டி ஊர் மகளிர் அவல் இடிக்கும் உலக்கையை (மகளிர் உலக்கையால் குற்றுதல்) நெல் வயலின் வரப்பில் சாய்த்து வைத்துவிட்டு வளையல் குலுங்க வண்டல் விளையாடுவார்கள்.
இவள் அந்தத் தொண்டி நகரம் போல நலம் மிக்கவள். இவளுக்கு அந்த நலத்தைக் கொடுக்கும் சூளுரை தந்துவிட்டு நீ இவளை அழைத்துக்கொண்டு செல்லலாம்.
இப்படித் தோழி பரத்தையிடமிருந்து மீண்ட தலைவனுக்கு அறிவுரை கூறுகிறாள்.
(நீ பரத்தையிடம் சென்றதால் இவள் நலம் இழந்து கிடக்கிறாள் என்கிறாள்)

  

No comments:

Post a Comment