Pages

Saturday, 2 August 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 236


There is a blend of complexion in her body and mind. If you leave your hug it will fade away. If you want to be with her give it her be ever and then leave her (to earn anything).
You are a Man of littoral land wherein bird NAARAI (image) live in its nest built in a branch of tree PUNNAI that grown at the side sand-hill.          

This is a poem compiled by NARI VERUU TALAIYAR
2nd century B.C.

236. நெய்தல்

விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ
நொந்தனை ஆயின், தந்தனை சென்மோ!
குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை
வம்ப நாரை சேக்கும் (படம்)
தண் கடற் சேர்ப்ப! நீ உண்ட என் நலனே.

வரைவிடை வைத்துப் பிரிவான். ''இவள் வேறு படாமை ஆற்றுவி'' என்றாற்குத் தோழி நகையாடி உரைத்தது.

நரிவெரூஉத்தலையார் பாடல்

நீ உண்ட நலன் இவளிடம் உள்ளது. நீ இவளை விட்டதும் இவள் அதனை விட்டுவிடுவாள். அந்த நலனை எண்ணி நீ மனம் நொந்துபோவாய் என்றால் அந்த நலனை நீ இவளிடமே தந்துவிட்டுச் செல்.

குன்றம் போல் குவிந்துள்ள மணலை அடுத்த கரையில் புன்னைமரம் நிலத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் கிளையில் புதிதாக வந்த நாரை கூடுகட்டிக்கொண்டு வாழும் சேர்ப்பு நிலத் தலைவனே, இதனை உணர். 

No comments:

Post a Comment